கிட்னி திருட்டு புகார் - போலீசார் விசாரணை

கிட்னி திருட்டு புகார் - போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் 

விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து கிட்னி திருடப்படுவதாக அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக கடன் வறுமை ,குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலம்பாளையம் டவுன் பஞ்சாயத்து ஆறாவது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் இதுகுறித்து தமிழக முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பிய நிலையில், இதனை அடுத்து திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புகார் அளித்த கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்க மூளைச்சலவை செய்யும் கிட்னி புரோக்கர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது சம்பந்தப்பட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் , முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்பட்டது., தற்போது மீண்டும் கிட்னி விற்பனை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

Tags

Next Story