ஒசூர் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை

ஒசூர் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை

அறுவை சிகிச்சை செய்த பெண்

ஒசூரில் முதன்முறையாக தனியார் மருத்துவமனையில் வேறுபட்ட ரத்தவகை கொண்ட நபருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது.

ஒசூரில் முதன்முறையாக தனியார் மருத்துவமனையில் வேறுபட்ட ரத்தவகை கொண்ட நபருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை சரஸ்வதி(19) என்கிற பெண் சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக டயாலிசஸ் செய்யப்பட்டு வந்தநிலையில்,

இவருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க அவரின் பெரியப்பா முன்வந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் சரஸ்வதி மற்றும் கொடையாளர்களை பரிசோதித்ததில் இருவருக்கும் வெவ்வேறு இரத்த வகை என தெரியவந்தது..

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெவ்வேறு இரத்த வகை கொண்டவர்களுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை சாத்தியம் என்றாலும், ஒசூரில் முதன்முறையாக தமிழக அரசின் அனுமதியுடன் வேறுபட்ட ரத்தவகை கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் சாய் சமீரா,வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவர்கள் Desensitization முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.. ஒசூரில் முதல்முறையாக வெவ்வேறு இரத்தவகை கொண்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளநிலையில் சரஸ்வதி காவேரி மருத்துவக்குழுவிற்க்கு, நன்றியை தெரிவித்துள்ளனர்.

சரஸ்வதி நலமுடன் வீடு திரும்பிய நிலையில் கொடையாளியும் நலமுடன் அன்றாட பணிகளை செய்து வருவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்..

Tags

Next Story