கீழ்பென்னாத்தூர் துவக்க பள்ளி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு
கேடயம் வழங்கி பாராட்டிய அமைச்சர்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (கிழக்கு) மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தலைமையாசிரியை மணிமேகலையிடம் கேடயம் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், உயரதிகாரிகள், கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி, பள்ளி உதவி ஆசிரியை வினோதினி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story