கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேரோட்டம்

கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேரோட்டம்
தேர் திருவிழா
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில்களின் 24-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் 15-வது ஆண்டு தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை, பால்குட ஊர்வ லம், பாலாபிஷேகம், விளக்கு பூஜை, பூப்பல்லக்கு திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேர் சக்கர பூஜையும், அதைத் தொடர்ந்து அம்மன் தேர் பிரவேசமும் காலை 9.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story