கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழு கூட்டம்-தீர்மானங்கள் நிறைவேற்றம்

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழு கூட்டம்-தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஒன்றிய குழு கூட்டம் 

கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய குழுதுணைத் தலைவர் வாசுகி ஆறுமுகம், ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் உதவியாளர் சேகர் தீர்மானங்களை வாசிக்க அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அப்போது ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ராஜேந்திரன்,குப்புசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு பணியாளர்களாக மாவட்ட கலெக்டரால் அனுமதிக்கப்பட்டு வட்டார மருத்துவ அலுவலரின் கண்காணிப்பில் தற்காலிகமாக பணிபுரியும் 43 பேருக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து அவசர அவசியத்தைமுன்னிட்டு மன்றத்தின் அனுமதி எதிர்நோக்கி வழங்கியமைக்கு மன்ற அங்கீகாரம் கோரப்பட்டது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ராயம்பேட்டை ஊராட்சியில் பழுதடைந்த பழைய அங்கன்வாடி கட்டிடம் அப்புறப்படுத்தவும்,மேக்களூர் ஊராட்சியில் 2022- 23ம் ஆண்டு மே.காட்டுக்குளம்பகுதியில் 51 இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதிவரப்பெற்று வேலை உத்தரவு வழங்கப்பட்டது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய பொறியாளர்கள் சிவக்குமார், ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல்கபார்(நிர்வாகம்), அண்ணாமலை (திட்டம்), வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் சதீஷ்குமார்,கால்நடை மருத்துவர் பேபி, குழந்தைகள் நலன் புவனேஸ்வரி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story