கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 - ஊராட்சிகளில் 25 - ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும், 10 - ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிள்ளியூர் கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், _ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 25 - ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைக்கும் முடிவையும், 10 - ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் அரசின் முடிவையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்தில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபா, சலோமி, ராஜ்குமார், மாநில மீனவரணி தலைவர் ஜோர்தான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் நூறுநாள் வேலை திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.