கீழ்வேளூர் : சிறப்பு மண் ஆய்வு விழிப்புணர்வு - வேளாண் துறை அழைப்பு

கீழ்வேளூர் :  சிறப்பு மண் ஆய்வு விழிப்புணர்வு - வேளாண் துறை அழைப்பு

 நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம்

கீழ்வேளூர் வட்டாரத்தில் நடைபெறும் சிறப்பு மண் ஆய்வு விழிப்புணர்வு முகாமை பயன்படுத்திக் கொள்ள கீழ்வேளூர் வட் டார வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரன் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கீழ்வேளூர் வட் டார வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கீழ்வேளூர் வட்டாரத்தில் 11 ம் தேதி குருக்கத்தி கிராமத்திலும் 12.ம்தேதி ஆனைமங்கலம் 13 ம் தேதி வெங்கிடங்கால் கிராமத்திலும் சிறப்பு மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

அதனைபயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் மண்மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்து பயன் அடைய லாம் மேலும் கீழ்வேளூர் வட்டாரத்தில் பட்டமங்க லம் கிராமத்தில் மண் பரி சோதனை முகாம் நடை பெற்றது இதில் ஏராளமான விவசாயிகள் மண் மற்றும் நீர் மாதிரிகளை செய்து கொண்டனர் மண்ணில் கார அமிலத்தன்மை உப் பின் நிலை சுண்ணாம்பு தன்மை மற்றும் சத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப் பட்டுஉமண்வளஅட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மண்வளத்தை காக்கும் பொருட்டு நடப்பாண்டில் விவசாயிகளுக்கு வட்டார விரிவாக்க மையங்கள் மூலமாக பசுந்தாள் விதைகள் முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீ தம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது இத்திட் டத்தில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்த கைதாரர்களும் பயன் பெறலாம் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந் தாள் உர விதைகள் 50 சத வீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்

Tags

Next Story