ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி.திருமால்முருகன், செயலர் முனைவர்.ஷோபா திருமால்முருகன், நிர்வாக சீனி.கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கலைமணி சரவணக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யூ.கே.ஜி முடித்து ஒன்றாம் வகுப்பிற்கு செல்லும் 93 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக யூ.கே.ஜி மாணவர் சலக்சன் வரவேற்புரை ஆற்றினார். யூ.கே.ஜி மாணவி சுனிதியும் மாணவன் பவன் ஆதித்யாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பின்னர் அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனாஜோஸ் 2023-2024 ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். தோடர்ந்து யூ.கே.ஜி மாணவி அபிநிதி மற்றும் மாணவன் கௌதம் ஆகியோர் தலைமையில் அனைவரும் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாணவ மாணவியர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் கிரிஷ்வந்த், லிஷாந்த் ஆகிய இருவரும் நன்றியுரை கூறினர். இறுதியாக பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை பாரத சாரண சாரணிய மாணவர்கள் பேண்ட் இசையுடன் விழா மேடையிலிருந்து ஒன்றாம் வகுப்பிற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.ஒன்றாம் வகுப்பில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களை பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
Next Story