ராணுவ வீரரின் சொத்தை கந்துவட்டி கும்பல் அபகரிக்க முயற்சி: பெற்றோர் பரபரப்பு புகார்!

ராணுவ வீரரின் சொத்தை கந்துவட்டி கும்பல் அபகரிக்க முயற்சி: பெற்றோர் பரபரப்பு புகார்!

பெற்றோர் பரபரப்பு புகார்

கோவில்பட்டி அருகே ராணுவ வீரரின் குடும்பச் சொத்தினை, கந்து வட்டிக்கும்பல் அபகரிக்க முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை நடுத் தெருவைச் சேர்ந்த மணி, பிச்சம்மாள் தம்பதியர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: எனக்கு 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நாங்கள் கழுகுமலை அருகேயுள்ள K.ஆலங்குளம் கிராமத்தில் சிறிய தீப்பெட்டி ஆலையினை நடத்தி வருகிறார். எனது இளையமகன் நாராயணன் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார். இதனிடையே தீப்பெட்டி ஆலையினை விரிவுபடுத்த கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள கோபாலன் காம்பவுண்டில் வசித்து வரும் காப்புலிங்கம்பட்டியினைச் சேர்ந்த அப்பாவு மகன் ராமகிருஷ்ணன் என்பவரது ஏஜண்டான மாடசாமி மகன் பூல்பாண்டி அறிமுகத்தின் பேரில் ரூபாய் 1.5 லட்சம் கடன் வாங்கினோம். வாங்கிய நாள் முதல், தொடர்ந்து முறையாக மாதம் தோறும் வட்டி சுமார் 1½ வருட காலமாக கட்டி வந்தோம். பின்பு பெய்த தொடர் மழை காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே வட்டி கேட்டு ராமகிருஷ்ணன் எங்களை அடிக்கடி மிரட்டி வந்தார். ஒரு கட்டத்தில் தொழில் முற்றிலும் முடங்கி விடவே வட்டி கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால் கடும் கோபமடைந்த ராமகிருஷ்ணன் கொடுத்த 1.50 லட்சம் ரூபாயிற்கு பதிலாக பல லட்சம் மதிப்புள்ள எங்களது வீட்டினையும் K.ஆலங்குளத்திலுள்ள 2 ஏக்கர் நிலத்தினையும் கிரையம் செய்து கொடுக்குமாறும் இல்லையேல் கொன்று விடுவதாகவும் பயங்கர ஆயுதங்களை வைத்து மிரட்டினார். உயிருக்கு பயந்த நாங்கள் வேறு வழி தெரியாமல் அவர் கூறிய படி பவர் ஆஃப் அட்டர்னியினை பூல்பாண்டிக்கு கொடுத்தோம். அப்பவரினை வைத்து மறுநாளே எங்களுக்கு உள்ள 2 சொத்தினை தனது பெயருக்கு கிரையம் செய்து கொண்டார். இது தொடர்பாக கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தோம். அதில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. எனவே இதனை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். கிரையம் செய்து கொண்டது மட்டும்மலாமல் வீட்டுச்சாவியினையும் நிலத்து சாவியினையும் உடனே ஒப்படைக்குமாறு மிரட்டினார். அதற்கு நாங்கள் மறுக்கவே எனது மூத்த மகன் இசக்கியப்பனை அடியாட்களுடன் எங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து பட்டப்பகலில் கடத்தி சென்றார். நாங்கள் பணத்தினை தருகிறோம். மகனை விட்டுவிடுமாறு அவரது காலில் விழுந்து வணங்கினோம். எங்களை தள்ளிவிட்டு தரதரவென்று இழுத்துச் சொன்றார் செய்வதறியாது தவிந்த நங்கள் காவல் துறையினரிடம் புகார் செய்யவே அதன் மீது நடவடிக்காக எடுத்த காவல்துறை எனது மகனை அவரின் இடத்திலிருது மீட்டது. இத்தீய செல்லுக்கு அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. எங்களைப் போன்றே பல நபர்களிடம் கடன் கொடுத்து அவர்களது சொத்தினை கைப்பற்றியதால் பல நபர்கள் அவர் பற்றி காவல்துறையிலும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கவே அப்போதைய மாவட்ட ஆட்சியர் அவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் எனது மகன் ஆ.நாராயணன் கடந்த 21.11.2005 அன்று திரிபுரா மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில், கழுத்தில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார் நம் நாட்டினைப் பாதுகாக்க தனது உயிரினை தியாகம் செய்தார். எங்களது சொத்து முழுவதினையும் இழந்து மகனையும் இழந்து நாங்கள் மனதளவில் சுக்கு நூறாக நொறுங்கி போனோம். ஒரு வழியாக மனதினை தேற்றிக்கொண்டு மகனின் வீரமரணத்திற்கான கருணைத் தொகையினை பெற்றுக்கொள்ள தமிழக அரசிற்கு கடந்த 2005 ஆண்டு முதல் தொடர்ந்து மனுச் செய்தோம்.இறுதியாக 2011ஆம் ஆண்டு அமைந்த புதிய அரசு கருணைத்தொகை ரூ5 லட்சத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகமான இதே இடத்தில் எங்களுக்கு வழங்கியது. இக்கருணைத் தொகையினை வைத்து ராமகிருஷ்ணனிடம் வாங்கிய 1.5 லட்சம் ரூபாய்க்கு கடன் பெற்ற நாளியிருந்து இது நாள் வரைக்கும் உள்ள மாதங்களுக்கு வங்கி வட்டி விகிதாச்சாரப்படி கணக்கிட்டு வட்டி ரூபாயினை தந்து விடுவதாக கூறி இருகரம் அதைப்பொருட்படுத்தாமல் எங்களிடம் சாவியினை பெற்றுக் கொள்வதிலேயே குறியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆண்டுக்கு ராமகிருஷ்ணன் இறந்து விடவே அவரது வாரிசுகளும் சொத்தினை அடைய வேண்டும் என்றே ஒரே நோக்கத்தில் செயல்படுகின்றார். தற்போது அறிமுகம் இல்லாத நபர்கள் எங்களின் வீட்டிற்கு அருகில் நடமாடிக் கொண்டு வருகின்றனர். எனவே கந்துவட்டி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story