இன்னர் வீல் சங்கம் சார்பில் கிடாதான் ஒட்டம் !

இன்னர் வீல் சங்கம் சார்பில் கிடாதான் ஒட்டம் !

கிடாதான் ஒட்டம்

இன்னர் வீல் சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கிடாதான் ஒட்டம்-2024 என்ற தலைப்பில் மாணவ மாணவியர்களுக்கான விழிப்புணர்வு ஒட்டம் நடத்தப்பட்டது.

ராசிபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கிடாதான் ஒட்டம்-2024 என்ற தலைப்பில் மாணவ மாணவியர்களுக்கான விழிப்புணர்வு ஒட்டம் நடத்தப்பட்டது. "மரம் நடுவோம் மண்ணின் நுரையீரலை காப்போம்" என்ற வாசகங்களுடன் புதுப்பாளையத்தில் உள்ள JVM பள்ளியின் மாணவ மாணவியர்களுக்கு முன்னதாகமரம் நடும் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் ஒட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இந்த ஒட்டப்போட்டியில், பள்ளியின் தாளாளர் முத்துச்சாமி, இணை இயக்குனர் காத்தமுத்து, பள்ளி முதல்வர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒட்டப்போட்டியை இன்னர் வீல் சங்கத் தலைவர் சுதா மனோகரன், செயலாளர் சிலாலீலாஜோதி கோபிநாத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டப்பட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 11 மரக்கன்றுகளும் பள்ளி வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இன்னர்வீல் சங்கப் பொருளாளர் ஆர்.சுதா ரமேஷ், முன்னாள் உடனடி தலைவர் கே.சரோஜாகுமார், உறுப்பினர்கள் சுந்தரிபாய் தியாகராஜன், சுதா ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story