கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கே.எம்.ஜி.சந்தை-2024
சந்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக துறை மற்றும் தொழில்முனைவோர் அமைப்புக்குழு சார்பாக "கே.எம்.ஜி.சந்தை-2024" நடைபெற்றது.
இவ்விழாவில் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தெய்வத்திரு.கு.மா. கோவிந்தராசனார் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியும், கே.எம்.ஜி சந்தையில் பங்கேற்ற மாணவ-மாணவியர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலர் கே.எம்.ஜி. இராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, கல்லூரி முதல்வர் முனைவர் மு.செந்தில்ராஜ் மற்றும் கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜா. ஜெயக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தார்.
தொழில்முனைவோர் சந்தைபடுத்துதல் திறன் மேம்படுத்துதல் குறித்த நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த மாணவர்களும் பங்கேற்று கைவினைப் பொருட்கள், உணவுப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள், இயற்கை உணவு பொருட்கள், சிறுதானிய உணவுகள், ஆடைகள், அழகு சாதனைப் பொருட்கள் என 70க்கும் மேற்பட்ட கடைகளில் தங்களின் பொருட்களைக் காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனைச் செய்தனர்.
கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்நிகழ்வை கே.எம்.ஜி. தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.காமராஜ் ஒருங்கிணைக்க, வணிக ஆள்முறையியல் துறைத் தலைவர் முனைவர் ர.மணிகண்டன்,
பேராசிரியர் முனைவர். ப.சங்கர் மற்றும் துறைப் பேராசிரியர்களும், தொழில் முனைவோர் அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.