கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
கோ பூஜை
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த பவுர்ணமி கோ பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு பசு, கன்றுக்கு சந்தனம் குங்குமம் பூசி, மகா தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். வாசவி கிளப் ஜெய்கணேஷ் சத்யா, நிர்வாக தலைவர் ரவீந்திரன், கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Next Story