கொடைக்கானல் : காட்டெருமை தாக்கியதில் சிறுவன் படுகாயம்
மருத்துவமனையில் சிகிச்சை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது காட்டெருமைகளின் கூட்டம் நகர் பகுதிகளில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவது வாடிக்கையாக உள்ளது,மேலும் அவ்வப்போது மனிதர்களையும், விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையும்,சில நேரங்களில் மனிதர்களையும் காட்டெருமை தாக்குவதும் தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் முக்கிய சாலை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் சாலையாக டிப்போ பகுதி உள்ளது,இப்பகுதியில் இன்று இரவு வேளையில் முகாமிட்ட ஒற்றை காட்டெருமை திடீரென அப்பகுதியில் உள்ள டீ கடையில் நின்றிருந்த ரியாஜ் (17) என்ற சிறுவனை வயிற்று பகுதியில் பலமாக முட்டியதில், வயிற்றின் அடிப்பகுதி குடல் சரிந்த்தாகவும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடையில் நின்றிருந்தவர்கள் அவரை துரிதமாக மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் நகர் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டெருமை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் டிப்போ பகுதியில் கடையில் நின்றிருந்த சிறுவனை காட்டெருமை தாக்கிய சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.