கொடைக்கானலில் கோடை விழா கொண்டாட்டம்

கொடைக்கானலில் கோடை விழா கொண்டாட்டம்

கரகாட்டம்

கொடைக்கானலில் கண்ணில் ஊசி வைத்து கரகாட்டம் ஆடியதையும், மேஜிக் ஷோ நிகழ்ச்சியினையும் கண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிரையன்ட் பூங்காவில் கடந்த வெள்ளி கிழமை அன்று மலர்கள் கண்காட்சியும் கோடை விழாவும் தொடங்கி நடைபெற்று வருகின்றது,இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் நடைபெற்ற கோடை விழாவில் முக்கிய நிகழ்வான கரகாட்டம் மற்றும் மேஜிக் ஷோவும் நடைபெற்றது, இதில் குறிப்பாக கரகாட்ட கலைஞர் கண்ணில் ஊசியை வைத்து அதை மணலில் வைத்ததும், மீண்டும் கண்ணில் வைத்து மேடை மற்றும் பார்வையாளர் அரங்கில் ஆடி கொண்டே வந்து பார்வையாளர்களிடம் காட்டி அசத்தினார், மேலும் கண்ணை கட்டிக் கொண்டு கரகம் ஆடிய படியே சிறுவன் வாய் பகுதியில் வைத்து இருந்த முள்ளங்கியை வெட்டியதும், கரகத்தினை தலையில் வைத்தபடி தாம்பால தட்டில் ஏறி நின்று ஆடியதும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது, அதே போல மேஜிக் கலைஞர் வாயில் இருந்து முட்டையை வரவைத்தது, துணியில் இருந்து புறா வர வைத்த நிகழ்வு அரங்கத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை கை தட்ட வைத்தது, மேலும் பப்பட் ஷோ, கோழி ஆட்டமும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அமைந்து இருந்தது, மேலும் மலைப்பகுதியில் பெய்த மழையினை பொருட்படுத்தாது சுற்றுலாபயணிகள் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்ததும் குறிப்பிடத் தக்கது

Tags

Next Story