கொடைக்கானல் : அதிவேக கார் ஏரியில் பாய்ந்து விபத்து
ஏரிக்குள் பாய்ந்த பொலீரோ கார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான புதுபுத்தூர் கிராமத்தில் இருந்து ஜெயபிரகாஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன்(கர்ப்பிணி பெண்களுடன்) அரசு மருத்துவமனைக்கு பொலீரோ வாகனத்தில் சிகிச்சைக்கு சென்றனர்,அதன் பின் ஏரியை நோக்கி சென்றுள்ளனர், அப்போது ஏரிச்சாலையில் வாகனத்தில் பயணித்த குடும்பத்தினரை இறக்கி விட்டு வாகனம் நிறுத்துவதற்காக வாகனத்தை இயக்கியுள்ளனர்.
அப்போது ஏரி சாலையில் அதிவேகமாக வாகனம் சென்றதால் சாலை வளைவில் எதிரே பயணித்த இருசக்கர வாகனத்தை இடித்து கொண்டு ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்தது,இதனை தொடர்ந்து ஜெயபிரகாஷ் என்பவர் ஏரி தண்ணீருக்குள் இருந்து நீந்தி கரைக்கு வந்துள்ளார்,இவருடன் பயணித்த காளிமுத்து முன்பகுதியில் இருந்து வெளியேவந்து வாகனத்தின் மேற்பரப்பில் நின்று கொண்டிருந்தார்,
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர், மேலும் இருசக்கர வாகனத்தில் பயணித்த மாரியம்மாள்(சாலையோர வியாபாரி) காலில் படுகாயங்களுடன் இருந்த நிலையில் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலென்ஸ் மூலம் கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,இச்சம்பவம் ஏரிச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏரிச்சாலையில் சுற்றி அமைத்து வரும் தடுப்பு வேலிகள் முழுமை பெறாத நிலையில் வாகனம் ஏரியில் பாய்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.