கொடைக்கானல் : மலைச்சாலைகளில் உருளை தடுப்பான் அமைக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருவதற்கு பிரதான சாலைகளாக பழனி மற்றும் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலை உள்ளது, இந்த மலைச்சாலையில் சில இடங்களில் வளைவுகள் அதிகமாகவும், சாலைகள் குறுகளாகவும் உள்ளது, இதனை தொடர்ந்து மலைச்சாலைகளில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது, இந்நிலையில் மலைச்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக பழனி மற்றும் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலைகளில் உருளை தடுப்பான் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த உருளை தடுப்பான்கள் பழனி பிரதான மலைச்சாலைகளில் 800 மீட்டர் தூரத்திற்கு 10க்கும் மேற்பட்ட இடங்களிலும், வத்தலக்குண்டு மலை சாலைகளில் 800மீட்டர் தூரத்திற்கு 10க்கும் மேற்பட்ட இடங்களிலும்,சுமார் 8 கோடி மதிப்பீட்டில் உருளை தடுப்பான்கள் அமைத்து வருவதாக நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் தகவல் தெரிவித்து உள்ளார், மேலும் மலைச்சாலைகளில் குறுகலாக உள்ள இடங்களில் அகலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.