கொடைக்கானல் அடர் பனி மூட்டம்,குளுமையான கால நிலை

கொடைக்கானல் அடர் பனி மூட்டம்,குளுமையான கால நிலை

கொடைக்கானலில் வார விடுமுறையில் சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களையும்,மேக கூட்டங்களையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

கொடைக்கானலில் வார விடுமுறையில் சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களையும்,மேக கூட்டங்களையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்,இந்நிலையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகமட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது, மேலும் கொடைக்கானலில் காலை முதலே மேக கூட்டங்கள் நிலவி இதமான கால நிலை நிலவுகிறது, இந்த இதமான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து சுற்றுலாப்பயணிகள் மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர், மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டும் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்,மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தலங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படுகிறது.

Tags

Next Story