பெரிய கருப்பண்ணசாமி கோவில் வைகாசிப் பெருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்
நேத்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் அருகே உள்ள ஈசிசி ரோடு பகுதியில் ஸ்ரீ பெரிய கருப்பண்ணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் கடந்த மாதம் 25ஆம் கொடியேற்றத்துடன் வைகாசி பெருதிருவிழா தொடங்கியது, இதனை தொடர்ந்து தினந்தோறும் கருப்பண்ணசாமிக்கு சிறப்பு அலங்காரங்கள்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,மேலும் இரவு நேரங்களில் கருப்பண்ணசாமி அலங்காரம் செய்யப்பட்டு தேர் பவனி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திரளான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், கருப்பண்ணசாமி வேடம் அணிந்தும்,பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நடனமாடி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர், இந்த ஊர்வலமானது டிப்போ காளியம்மன் கோவிலில் இருந்து துவங்கி நாயுடுபுரம் வழியாக கோவிலை சென்றடைந்தது,இந்நிகழ்வில் இப்பகுதி சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டனர், இதனை தொடர்ந்து கோவிலில் எழுந்தருளிய ஸ்ரீ பெரிய கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.