கொடைக்கானலில் இ-பாஸ் எதிரொலி
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலதாலமாகும், இங்கு தினந்தோறும்,விடுமுறை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிவது வழக்கம்,l.
இதே போன்று சீசன் காலங்களான மே,ஜீன் மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் ஜீன் 30 வரை கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கொடைக்கானலில் இ-பாஸ் முறையை நேற்று முதல் அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த இ-பாஸ் எதிரொலி காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது, குறிப்பாக கொடைக்கானல் மலைச்சாலைகள், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரிச்சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் கொடைக்கானலில் 90 சதவிகித மக்கள் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர், இதனையடுத்து மே,ஜீன் மாதங்களில் வரும் வருமானத்தை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தனர், இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா தொழில் புரிவோர் வாழ்வாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக வருத்ததுடன் தெரிவிக்கின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் வரும் நடுத்தர பொதுமக்களுக்கும்,சுற்றுலாப்பயணிகளுக்கும் இ-பாஸ் குறித்து போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்றும் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.