கொடைக்கானல் : தவழ்ந்து செல்லும் வெண்பனி மேகம் - ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் : தவழ்ந்து செல்லும் வெண்பனி மேகம் - ரசித்த சுற்றுலா பயணிகள்

வெண்பனி கூட்டங்கள் 

கொடைக்கானலில் நீண்டநாட்களுக்கு பிற‌கு ரம்மியமாக காட்சியளித்த வெண்பனி கூட்டங்கள், மலைமுகடுகளின் இடையில் தவழ்ந்து சென்றதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்ததால் அதிக அளவில் குளிரும் நிலவியது, இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதல் சாரல் மழை பெய்த நிலையில் மழை நின்ற பின்னர் மாலை வேளையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வானம் நீலநிறத்தில் காட்சியளித்ததுடன் மிதமான வெப்பம் நிலவி வருகிறது.

மேலும் மலைப்பகுதியில் இதமான கால நிலை நிலவுவதுடன் கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்தில் இருந்து எதிரே உள்ள மலைமுகடுகளை பார்க்கும் போது,மலைமுகடுகளின் இடையில் வெண்பனி மூட்டங்கள் தவழ்ந்து செல்வது போலவும், வெண்ப‌ஞ்சுக‌ள் போன்றும் கடல் அலைகள் போன்றும் ரம்மியமாக காட்சியளித்தது, இதனையடுத்து கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வெண்பனி மேகக்கூட்டங்களை கண்டு ரசித்ததுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாக‌ம‌டைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story