கொடைக்கானலில் பல்சுவை நடனம் - குதூகலம்

கோடை விழா நடைபெற்ற அரங்கில் தகரங்கள் அமைக்காமல் அலங்கார துணி மட்டும் அமைத்து இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று 61-வது மலர் கண்காட்சி துவங்கியது,மேலும் கோடை விழாவும் துவங்கியது, இன்று துவங்கி நடைபெறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற கோடை விழாவில் பரத நாட்டியம்,சுவாமி பாடல்கள்,சினிமா பாடல்கள் உள்ளிட்டவைகளுக்கு கலைஞர்கள் நடனம் ஆடினர், மேலும் சிறுவர்,ஆண்,பெண் உள்ளிட்டவர்களுக்கு மியூசிக் சேர் உள்ளிட்டவைகள் விளையாட்டு துறை சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, இந்நிலையில் கோடை விழா நடைபெற்ற அரங்கில் சுற்றுலாப்பயணிகள் அமரும் இருக்கைகள் மீது அமைக்கப்பட்ட கூடாரத்தில் ஒரு பகுதி தகரங்களிலும்,ஒரு பகுதி அலங்கார துணிகள் மூலம் அமைக்கப்பட்டது, இன்று பிற்பகல் வேளையில் பெய்த மிதமான மழையில் துணிகள் அமைக்கப்பட்ட இடத்தில் மழை தண்ணீர் வடிந்தது.

இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் மழை நீரில் நனைந்தப்படி கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்,மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் துணிகள் மூலம் கூடாரம் அமைத்த சம்பந்தப்பட்ட துறை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர் .

Tags

Next Story