படுகர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை கோலாகலம்

ஊட்டியில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களின் குல தெய்வமாக ஹெத்தை அம்மனை வழிப்பட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும ஜனவரி மாதத்தில் இந்த ஹெத்தை பண்டிகை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான திருவிழா துவக்கவிழா கோத்தகிரி அருகே உள்ள பேரகனி ஹெத்தையம்மன் கோவில் சிறப்பு பூஜைகளுடன் கடந்த வாரம் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று குன்னூர் அருகே உள்ள ஜகதலா கிராமத்தில் ஹெத்தை அம்ன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story