குமரியில் கோமாரி நோய் தடுப்பு திட்ட ஆலோசனை
ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5வது சுற்று கோமாரி நோய் என்னும் கால்நோய் வாய்நோய் தடுப்பூசி திட்டம் ஜூன் மாதம் 10-ஆம் தேதி (இன்று) முதல் 21 நாட்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கான தொடர்பு துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின், பால்வளத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபி.என்.ஸ்ரீதர் கோமாரி நோய் தடுப்பு திட்டம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இத்திட்டத்தினை பயன்படுத்தி அனைத்து கால்நடை வளர்ப்போரும் எவ்வித விடுபாடின்றி அனைத்து தகுதியான கறவை மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஆர்.இராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள், குழித்துறை நகராட்சி, பத்மநாபபுரம் நகராட்சி அலுவலர்களும், மாவட்ட வன அலுவலரின் பிரதிநிதியும் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.