விஸ்வநாதபுரியில் கோமாரி தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

விஸ்வநாதபுரியில் கோமாரி தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
கோமாரிநோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைப்பு 
விஸ்வநாதபுரியில் கோமாரி தடுப்பூசி போடும் திட்டத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

விஸ்வநாதபுரியில் கோமாரி தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆட்சி தங்கவேல். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, விஸ்வநாதபுரியில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கால்நடைகளுக்கு இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு ஊசி ஐந்தாவது சுற்று போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று துவக்கி வைத்தார்.

மேலும், கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி உள்ளிட்ட கால்நடை மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள்,ஊர்

பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story