உத்தமசோழபுரம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

உத்தமசோழபுரம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 

திருமருகல் அருகே உத்தமசோழபுரம் ஊராட்சியில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் சுமார் 280 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ரமேஷ் உத்தரவின் பேரில், உதவி இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்

.இதில் பசு மாடுகள், எருமை மாடுகள், கன்று குட்டிகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. அப்பகுதியில் சுமார் 280 -க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் கால்நடை உதவி மருத்துவர் முத்துகுமரன், கால்நடை ஆய்வாளர் பாபுஜி ,கால்நடை பராமரிப்பு உதவியாளர் எழிலரசி,செயற்கை முறை கருவூட்டலாளர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story