நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

நிபந்தனையற்ற ஆதரவு

திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார்.

திருப்பூர் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்ததற்கு திருப்பூரில் உள்ள நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி இல்லத்தில், அவரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்தார். கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் அண்ணாமலை வரகைக்கு பின்பு பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.

’மீண்டும் மோடி வேண்டும் மோடி’ என்ற பாஜகவின் மந்திரம் வெற்றிபெறும். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும். இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க கொங்குநாடு முன்னேற்ற கழகம் தனது ஆதரவை தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

2024-ம் ஆண்டு மீண்டும் மோடி வருவது தான், இந்தியாவுக்கு நல்ல விஷயம் என, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் பெஸ்ட் ராமசாமி பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். நாட்டின் பிரதமர், நாட்டின் முதல்வர் மக்களை சந்தித்தால் தான் ஜனநாயகம் வலிமை பெறும். மோடி நாடு முழுவது மக்களை சந்தித்து வருகிறார். கோவையில் நடைபெறும் பிரதமரின் ரோட்ஷோவை தடுப்பதற்கு திமுக அரசின் காவல்துறை சொல்லும் 4 காரணங்கள் விசித்திரமாக இருந்தது. கோவையில் நடைபெறும் பிரதமரின் ரோட்ஷோவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது. நாளை (இன்று ) மாலை 5 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பேசி வருகிறார்கள். போதை சாக்லெட், போதை ஊசி திருப்பூரில் மட்டுமில்லை, தமிழ்நாடு முழுவதும் தான் உள்ளது. இதனை பற்றி பேசினால் அவதூறு வழக்கு தொடுக்கிறார்கள். இதில் மாநில அரசு கடமை தவறிவிட்டது. தேர்தல் ஆணையத்துக்கும், பாஜகவுக்கும் வேறு வேலை இல்லையா? மோடி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குள் தான் இருக்கிறார். தேர்தல் தேதி தெரிந்து தமிழ்நாட்டில் பாஜக உழைக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் தான் பிரதமர் செல்கிறார். ஒரு பிரதமரே வீதிக்கு வருகிறார் என்றால், அது நல்லது தானே. சேலத்தில் மாநாடு போட்டால் திமுகவினர் வண்டி வைத்து செல்கிறார்கள். யானைக்கு மதம் பிடித்தது போல், திமுகவுக்கு பணவெறி, பதவிவெறி மற்றும் அரசியல்வெறி பிடித்துள்ளது.

இதற்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் பதில் சொல்லும். பிஎம்ஸ்ரீ பள்ளி தமிழ்நாட்டில் தொடங்கித்தான் ஆகவேண்டும். புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்றால், ஆட்சியில் உள்ள உங்களின் கல்விக்கொள்கையை காட்டுங்கள்? புதிய கல்விக்கொள்கை உட்பட பிஎம் ஸ்ரீ பள்ளியில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அடிப்படை கல்வித் தரத்தை புதிய கல்விக்கொள்கை உயர்த்தும். தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பிரதமரை அழைத்து செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அமைச்சர் ஆ.ராசா சத்தமாக பேசினால் தான், திமுகவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும். அதனால் அவர் சத்தமாக பேசுகிறார். இண்டியா கூட்டணி நிறைவு யாத்திரையில் ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர். செல்லும் இடங்களில் மோடி வாழ்க முழக்கமும், ஜெய்ஸ்ரீராம் கோஷமும் தான் கேட்கிறது. மோடி டீ விற்றார். இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் நாட்டை விற்றவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story