கோரம்பள்ளம் குளத்தில் மறுசீரமைப்பு பணி : சிறப்பு செயலாளர் ஆய்வு
சீரமைப்பு பணிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதிகனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும் மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரிசெய்யும் பொருட்டு தற்காலிக சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதை நீர்வளத்துறை சிறப்பு செயலாளர் முருகன், முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, மதுரை மண்டலம் தலைமை பொறியாளர் ரவி, தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பொறிமாரியப்பன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.