கொருக்குப்பேட்டை ஆய்வாளர் சஸ்பெண்ட்

கொருக்குப்பேட்டை ஆய்வாளர் சஸ்பெண்ட்

 காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் 

கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பழிக்கு பழி கொலை அரங்கேறிய நிலையில் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவிட்டார்.
வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நேற்று மாலை ஸ்வீட் தினேஷ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பிஸ்கேட் சந்தோஷ் என்பவர் முன்பகை காரணமாக வெட்டி படுகொலை செய்த நிலையில், இருவருக்கும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதாக ஏற்கனவே நுண்ணறிவு பிரிவு காவல்துறை அறிவுறுத்திய போதும் அதை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்த காரணத்தினால் கொலை சம்பவமானது அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மெத்தனமாக இருந்த காரணத்தினால் கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜ் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Tags

Read MoreRead Less
Next Story