அருள்மிகு கோட்டபுரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு கோட்டபுரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் -  திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு கோட்டபுரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
பெரணம்பாக்கம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் அருள்மிகு கோட்டபுரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பெரணம்பாக்கம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் அருள்மிகு கோட்டபுரி அம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு ,கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி, பிரவேச பலி,நடைபெற்றது. நேற்று காலை கணபதி ஹோமம் துர்க்கை பூஜை ,கலச பூஜை ,மேள,தாளம் முழங்க கலச புறப்பாடுகளுடன் கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திலும் அம்மன் கருவறையிலும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு மகாதீபாரதனை நடைபெற்றது .இதில் சேத்துப்பட்டு ,போளூர் ,ஆரணி, திருவண்ணாமலை ,கலசபாக்கம் ,வில்வாரணி என பல்வேறு பகுதியில் இருந்து பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு ,ஓம் சக்தி, பராசக்தி என சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர். .

Tags

Next Story