பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் கோட்டாட்சியர் ஆய்வு

பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில், அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி மலைக் கிராமத்தில் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் அனைவரும் கணினி வழியில் பழங்குடியினர் இனச்சான்று பெற்றுள்ளனரா என விசாரணை மேற்கொண்டார். அதில், அனைத்து மாணவ, மாணவியரும் இனச் சான்றுகள் பெற்றுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து, மாணவ, மாணவியரை தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராகும்படி கோட்டாட்சியர் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story