சாதி சான்றிதழ் இல்லாமல் தவித்த மக்களுக்கு சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர்

சாதி சான்றிதழ் இல்லாமல் தவித்த மக்களுக்கு சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர்

சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர் 

அரூர் அருகே பல ஆண்டுகளாக சான்றிதழ் பெறமுடியாமல் தவித்த, இருளர் பழங்குடியின மக்களுக்கு, ஒரே வாரத்தில் கிராமத்திற்கே கோட்டாட்சியர் சென்று வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட தீர்த்தமலை கிராமத்தில், இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்களுக்கு வீடு மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இல்லாததை அறிந்த அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அப்போழுது வருவாய் துறையினர் ஆய்வு செய்தபோது, பல ஆண்டுகளாக சான்றிதழ் வாங்க இயலாமல் இருந்த இருளர் பழங்குடியின மக்களுக்கு ஒரே வாரத்தி சாதி சான்றிதழ்கள் தயார் செய்து, கிராமத்திற்கே சென்று, மக்களை சந்தித்து வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் சாதி சான்றிதழ்களை வழங்கினார். இதனால் அலுவலர்கள் ஆய்வு செய்தவுடன் சான்றிதழ் கிடைத்ததால்,

இருளர் இன மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேப்போல் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தீர்த்தமலை வருவாய் ஆய்வாளர் சத்திய பிரியா, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story