கொத்தாளி இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா
கயத்தாறு அருகே கொத்தாளி இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கொத்தாளி இசக்கியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா 3 நாட்களுக்கு முன்னர் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீமுப்பந்தல் இசக்கி அம்மன், ஸ்ரீ நீலிகாத்த வனப்பேச்சி அம்மன், நீலகண்ட சுவாமி, சுடலைமாடசாமி, ஸ்ரீ இசக்கிசக்தி அம்மன் ஆகிய 5 சுவாமிகளின் புதிய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு புனித நீர் தெளித்தனர். விழாவில், கொத்தாளி, புதுக்கோட்டை, இராஜாபுதுக்குடி, கயத்தாறு, தூத்துக்குடி, கொல்லங்கிணறு,அம்மாள் பட்டி, உள்பட 20 கற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Next Story