கோட்டக்குப்பம் வியாபாரிகள் மின்துறை அதிகாரிகளிடம் மனு
குறைந்த மின்னழுத்த பிரச்சனையை நீக்க கோரி கோட்டக்குப்பம் வியாபாரிகள் மின்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
குறைந்த மின்னழுத்த பிரச்சனையை நீக்க கோரி கோட்டக்குப்பம் வியாபாரிகள் மின்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் இயங்கும் வ.உ.சி கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் அன்சர் பாஷா தலைமையில் நிர்வாகிகள் பலர் கோட்டக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து சங்க நிர்வாகிகளுடன் மனு அளித்தனர். அந்த மனுவில், கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து நிகழும் குறைந்த மின்னழுத்தம் மின்சார விநி யோகம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டா லும் கொடூர வெயிலின் தாக்கத்தாலும் வியாபா ரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நீண்ட நேர மின் வெட்டு மற்றும் குறைந்த அழுத்த மின்சாரத்தால் பிரிட்ஜ் போன்ற குளிர்சாதன பெட்டிகளில் வைக் கப்படும் அனைத்து பொருள்களும் வீணாகி வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படு கிறது.எனவே அறிவிக்கப்படாத தொடர் மின்வெட் டையும் குறைந்த அழுத்த மின் விநியோகத்தை யும் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட கண்டமங்கலம் செயற்பொறியாளர் சிவகுரு, இன்னும் 5 நாட்களில் குறைந்த மின் அழுத்த மின்சார விநியோகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சீரான மின்சாரம் வழங்கப்படும் என்றும், இதற்காக இளநிலை பொறியாளர் சேகர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த மின் மாற்றிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
Next Story