கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது: ஊராட்சியில் சிறப்பு தீர்மானம்

கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது: ஊராட்சியில் சிறப்பு தீர்மானம்
ஊராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் 
கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம் ஊராட்சியை இணைக்கக் கூடாது என்று பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாண்டவர்மங்கலம் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது, பாண்டவர்மங்கலம் ஊராட்சி தொடர்ந்து ஊராட்சியாகவே நீடிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி உடன் இணைக்கப்பட்டால் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவது மட்டுமின்றி, வீட்டு வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்ந்து விடும்,

தேசிய ஊராட்சி வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால் மக்கள் நலன் கருதி நகராட்சி உடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென்று கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story