கோவில்பட்டி: சிந்தாமணி விநாயகர் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

கோவில்பட்டி: சிந்தாமணி விநாயகர் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்

கோவில்பட்டி சிந்தாமணி விநாயகர் கோவிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது.

கோவில்பட்டி சிந்தாமணி விநாயகருக்கு காலை 5 மணிமுதல் மஹா கணபதி ஹோமம், மஹா பூர்ணாகுதி,பால்குடம் தீர்த்த குடம் அழைப்பு, 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள்,கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம்,அலங்கார தீபாரதனை உள்பட விசேஷ பூஜைகள் நடந்தது.

மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பெருமாள் கோவில் முன்பிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.பின் விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதற்கான பூஜைகளை அர்ச்சகர் லட்சுமி நாராயணன்,தியாகராஜன் ஆகியோர் செய்து இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமையில் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story