கோயக்காடு கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்

காங்கேயம் அருகே கோயக்காடு கருப்பண்ணசாமி திருக்கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காங்கேயம் அடுத்த நத்தக்கடையூர் அருகே உள்ள அத்தான் வலசு மற்றும் குட்டறை பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கன்னிமார் கோயக்காடு கருப்பண்ணசாமி திருக்கோயில் மற்றும் பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு திருவிழா நேற்று காலை 10 மணி முதல் நடைபெற்றது. முன்னதாக 18ம் தேதி திங்கட்கிழமை மங்கள இசை உடன் கணபதி பூஜை, கணபதி யாகம் நடைபெற்றது.

அதே அன்று மாலை முளைபாரி பூஜை,திருகாப்புக்கட்டுதல்,முதற்காலயாக பூஜை நடைபெற்றது. இதை அடுத்து 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம், புதிய மூர்த்தி கோபுர கலசம் அபிஷேகம், மண்டல அர்ச்சனை, வேதிகை பூஜை, துவார பூஜை, யாகத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. அதே அன்று மாலை விஷேசந்தி புண்யாக வாஜனம் திருக்கோவில் கோபுரம் கண் திறப்பு, கருவறை தீபம் ஏற்றுதல், பாவனா அபிஷேகம், மூன்றாம் கால யாக பூஜை கோபுர கலசம் வைத்தல், திரவ்யாகுதி பூர்ண குதி பூஜை தொடர்ந்து புதிய மூர்த்தி சிலையை கருவறையில் நிலைநாட்டுதல் யாந்திரஸ் தாபனம் என் வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 20ம் தேதி நேற்று காலை மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம் புதிய மூர்த்தி சிலைகளுக்கு திருகாப்பு கட்டுதல், நாடிசந்தனம் உயிர் சக்தி கொடுத்தல், யாகம் நிறைவு தீபாராதனை யாத்திர தானம் கலசம் புறப்பாடு திருக்கோயில் வலம் வந்து கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி, கன்னிமார், கருப்பண்ணசாமி பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேக தீபாரதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக பூஜைகளை சிவசாமி குருக்கள் மற்றும் பிரபு குருக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அத்தான்வலசு மற்றும் குட்டறை ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்களும், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story