ஊத்தங்கரை அருகே ரூ.2.85 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
நலத்திட்ட உதவிகளுக்கு பூமி பூஜை
ஊத்தங்கரை அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2 கோடி 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 63 திட்ட பணிகளுக்கு பூமி பூஜையை மதியழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2 கோடி 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 63 திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. கொண்டம்பட்டி அத்திப்பாடி கீழ்குப்பம் நொச்சிப்பட்டி பெரிய கொட்ட குளம் கதவணி ஆகிய 6 ஊராட்சிகளில் 4 அங்கன்வாடி மையங்கள் 2 பொது விநியோக கடைகள் 6 கதிரடி களம் 31 சிமெண்ட் சாலை பணிகள் 3 பேவரைட் சாலைபணிகள் 3 மயானங்கள் 14 தெரு விளக்குகள் என 63 திட்ட பணிகளுக்கு பூமி பூஜைகள் நடைபெற்றது.
திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி சுப்பிரமணி ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர்கள் மூன்றம் பட்டி குமரேசன் எக்கூர் செல்வம் ரஜினி செல்வம் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டிசிஆர்,தினேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் லயோலோ ராஜசேகர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் காளிதாஸ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பெருமாள் சாமி, வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னதாய் கமலநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.