சிஏஏ சட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் - காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம்
பிரச்சாரம்
ஓசூரில் மதத்தின் பெயரில் கொண்டுவரப்பட்ட சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை செயல்படவிடாமல் காங்கிரஸ் கட்சி போராடும் என வாக்குறுதி அளித்து இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ஒசூர் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கி பிரசார பணிகளை தொடங்கி உள்ளார்.. இன்று, ஒசூரில் உள்ள மசூதி, பள்ளிவாசல்களில் தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய கோபிநாத், மதத்தின் பெயரில் கொண்டுவரப்பட்ட CAA உள்ளிட்ட சட்டங்கள் செயல்பட விடாமல் காங்கிரஸ் கட்சி போராடும், தொடர்ந்து இஸ்லாமியர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் பேரியக்கம் காங்கிரஸ் கட்சி எனக்கூறி இஸ்லாமியர்களிடம் வாக்குகளை சேகரித்தார்..
Next Story