கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கே.எம்.சரயு ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகின்றன. வாக்குகள் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், கிருஷ்ணகிரி பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு ஆய்வு செய்தாா். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறை, தோ்தல் ஆணையத்துக்கு விவரங்களை அனுப்பவதற்கான இணையதள வசதி, முகவா்களுக்கான வசதி, பதிவான வாக்குகள் எண்ணுவதற்கான மேஜை, கண்காணிப்பு கேமரா பொருத்தும் பகுதி, பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

Tags

Next Story