சுத்திகரிக்கப்பட்ட நீர் நிலையத்தை கிருஷ்ணகிரி எம்.பி திறந்து வைப்பு
சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த எம்பி
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வருகின்ற காலம் கோடைக்காலம் என்பதால் பயணிகளின் தாகத்தினை போக்கிடும் வகையில் கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பிட்டில் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வருகின்ற காலம் கோடைக்காலம் என்பதால் பயணிகளின் தாகத்தினை போக்கிடும் வகையில் கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பிட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
மேலும் பயணிகளின் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்ட தனியங்கி குடிநீர் நிலையத்தினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் குத்து விளக்கு ஏற்றி பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத் தலைவர் சேகர், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் துரைசாமி,
நகர தலைவர் முபாரக், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ்பாபு, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஹரிஸ் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டாரத் தலைவர்கள் தனஞ்செயன், சித்திக், நகரத் தலைவர் தேவ நாரயணன், மாவட்ட செயலாளர் ஹரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.