கிருஷ்ணகிரி எம்பி கண்டா வரச் சொல்லுங்க போஸ்டரால் பரபரப்பு
கிருஷ்ணகிரி எம்பி கண்டா வரச் சொல்லுங்க போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த பாவக்கல் பகுதியில் கண்டா வரச் சொல்லுங்க என கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் பதவி வகித்து வந்த நிலையில் அவரை சித்தரித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டரில் கண்டால் வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டியதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இது போன்ற போஸ்டர் கிராமப் பகுதியில் ஒட்டியிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுகிறது
Next Story