மகளிர் தினம் கொண்டாட்டம் - வாழ்த்து தெரிவித்த நீதிபதிகள்
ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், சர்வதேச மகளிர் தின விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அமர் ஆனந்த், வழக்கறிஞர் சங்கத் தலைவர் மூர்த்தி,செயலாளர் வஜிரவேல்,மூத்த வழக்கறிஞர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்வதேச மகளிர் தினம் குறித்து வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் பிரபாவதி, வழக்கறிஞர்கள் திலகா,பவித்ரா,தலைமை எழுத்தாளர் மரகதவள்ளி ஆகியோர் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்தும்,சமூகத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் நிலை குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினர். தொடர்ந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Next Story