குமரமுருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

குமரமுருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் அருகே உள்ள குமர முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கரிக்கல் குமரகிரி மலையில் அமைந்துள்ள குமரமுருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு மூலவர் குமரமுருகன், உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி தேவசேனா சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவித்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

இதில் கரிக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கினார்கள்.

Tags

Next Story