K.R.N.ராஜேஸ்குமார் MP ஹாப்பி! ஸ்வீட் எடுத்தார்..‌ கொண்டாடினார்...!

தமிழக பட்ஜெட்டில், ரூ. 358 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டதைப் பாராட்டிய எம்.பி ராஜேஸ்குமார், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளான எருமப்பட்டி, சேந்தமங்கலம் பகுதிக்கு ரூ.360 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு, ராஜேஸ்குமார் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் தாக்கல் செய்த, தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த, 89க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 358 கோடி மதிப்பில் எருமப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நாமக்கல்- மோகனூர் சாலை முல்லை நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்து, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பியை சந்தித்து, தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தனர். தமிழக அரசால் புதிய குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டதைப் பாராட்டிய எம்.பி ராஜேஸ்குமார், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது... நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியங்களில் உள்ள சுமார் 150 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழக பட்ஜெட்டில், ரூ. 358 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டத்தின் மூலம் 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 24 கிராம பஞ்சாயத்துக்கள் பயன்பெறும். இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, கபிலர்மலை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும். இதனால் கபிலர்மலை மற்றும் பரமத்தி பகுதிகளுக்குட்பட்ட 216 வழியோர குக் கிராமங்கள் பயன்பெறும். வறட்சியான பகுதிகளின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், கூட்டு குடிநீர் திட்டம் அறிவித்த தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு, அப்பகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் கூறினார். பேட்டியின் போது , ஒன்றிய திமுக செயலாளர்கள் சேந்தமங்கலம் அசோக்குமார், எருமப்பட்டி பாலசுப்ரமணியன், டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள் பழனியாண்டி, முருகேசன், தனபால், வக்கீல் ஆனந்தபாபு, மாவட்ட துணை செயலாளர் ராணி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் விமலா, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமாலா, துணை தலைவர் கீதா, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் சித்ரா, பாப்பு, ஒன்றிய கவுன்சிலர்கள் சரசு, பெரியசாமி, மகாமுனி, முத்துகிருஷ்ணன், விமல்,பஞ்சாயத்து தலைவர்கள் பிரபாகரன், குணசேகரன், விஜயபிரகாஷ், செல்வம், அபிமன்யூ, பெரியசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story