நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த K.R.N.ராஜேஸ்குமார் MP
ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல் சேலம் கரூர் திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், அலங்காநத்தத்தில் நடைப்பெற்ற தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டியினை K.R.N.ராஜேஸ்குமார் MP கொடிசைத்து துவக்கி வைத்தார். அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு விழா குழுத் தலைவர் R.கோவிந்தன் தலைமை வகித்தார்.ஒன்றிய கழக செயலாளர் பாலு (எ) பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் பகுதியில் ஜல்லிக்கட்டு விழா குழு சார்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 550 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடினர்,முன்னதாக, ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாசிக்க மாடுபிடி வீரர்கள், அதனைப் பின்பற்றி உறுதிமொழியேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கினர். சிறந்த மாடிபிடி வீரர்களுக்கு, டைனிங் டேபிள், டிரஸிங் டேபிள், குக்கர், மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிகட்டு வீரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு மாடுகளை அடக்க முயன்றனர்.
Next Story