உலக சாதனை நிகழ்த்திய ஸ்ரீ வித்ய பாரதி மழலையருக்கு பாராட்டு

உலக சாதனை நிகழ்த்திய ஸ்ரீ வித்ய பாரதி மழலையருக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீ வித்ய பாரதி மழலையர் & தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு யோகா பெடரேஷன் ஏழாம் ஆண்டு ஆரம்ப விழாவின் சார்பாக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் உடன் இணைந்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தலையில் நீர் கோப்பை வைத்துக்கொண்டு அர்த்தமத்தேந்திரசனா 180 வினாடிகள் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். இந்த உலகச் சாதனையானது நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் மினிஸ்ட்ரி ஆப் ஆயுஸ் என்பதில் பதிவு செய்யப்படுகிறது.
இதற்கு அரசாங்கத்தின் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்கு பள்ளியின் நிர்வாகம் மற்றும் முதல்வர் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ்குமார், கார்த்திக் ஆகியோர் சார்பாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
