தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு!

தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

விராலிமலை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், 96 வது மாநில சீனியர் தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஹாமர் எறிதல், போல் வால்ட், தடை தாண்டி ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதனை மாநில தடகள சங்கத் தலைவர் தேவாரம் தொடங்கி வைத்தார்.

இதில் CVB Sports academy சார்பில், 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தி வரும், CVB ஸ்போர்ட்ஸ் அகாடெமி வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் அதிக அளவில் பதக்கங்கள் வென்றனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் CVB ஸ்போர்ட்ஸ் அகாடெமி. இந்த செய்தி அறிந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று, பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளை வாழ்த்தினார்.

தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, இதுகுறித்து பேசிய விஜயபாஸ்கர், அகடமி குறித்து பேசியதை தொடர்ந்து .. பிளக்ஸ் போர்டு அகற்றம், பணி நீக்கம் தொடர்பான கேள்விகளை எழுப்பிய போது.. நான் அரசியல்வாதியாக இருந்தாலும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதிகாரி பணியிடை நீக்கம் குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story