செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு !!

செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு !!

தூய்மை பணியாளர்

ஜெயங்கொண்டத்தில் 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தவறவிட்ட ஆசிரியரிடம் செல்போனை ஒப்படைத்த நகராட்சி தூய்மை பணியாளரை பாராட்டினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுத்தறிவு நகரை சேர்ந்த ஆசிரியர் ஜான்சன். என்பவர் புதன்கிழமை அன்று 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது செல்போனை தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கீழே தவற விட்டு விட்டார்.

இதனால் ஜான்சன் காணாமல் போன தனது போனை விட்ட இடம் தெரியாமல் பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்துள்ளார்.சிறிது நேரத்தில் பகுத்தறிவு நகரில் அங்கு நகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணி செய்து கொண்டிருந்தார்.அப்போது கீழே கிடந்த செல்போன் ஒலித்துக் கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு தூய்மை பணி மேற்கொண்ட தூய்மை பணியாளர் காந்திமதி ஒலித்துக் கொண்டிருந்த செல்போனை எடுத்து துப்புரவு பணி மேற்பார்வையாளர் காளிமுத்துவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அதில் வந்த போனுக்கு போன் உரிமையாளர் விபரம் கேட்டறிந்த காளிமுத்து பிறகு செல்போனை தவற விட்ட ஜான்சன் ஆசிரியரை அழைத்து அவரிடம் செல்போனை ஒப்படைக்கப்பட்டது.

இதனால் ஆசிரியரும் அப்பகுதி மக்களும் தூய்மை பணியாளர் காந்திமதி (50) மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர் காளிமுத்து ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.ஜெயங்கொண்டம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொள்வதுடன் நற்செயல் செய்து வருவது பொது மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

Tags

Next Story