அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு 

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஊக்குவித்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி மாணவிகள் சு.பிரியா மணி 490, கா.கல்கி 486, மூ.துஷ்மிதா 483 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர். 400 க்கு மேல் 15 மாணவர்கள் எடுத்துள்ளனர். கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் மாணவி கா.கல்கி 100 க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கோ.சுகன்யா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவி த.சசிகலா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பா.பெரியநாயகி, கிராம கமிட்டி பொருளாளர் சு.ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரா.ரவிராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ராமகிருஷ்ணன் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சவணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை களத்தூர் கிராமக் கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story