ஆதரவற்றோரின் உடல்களை அடக்கம் செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

ஆதரவற்றோரின் உடல்களை  அடக்கம் செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

உடல்கள் அடக்கம் 

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் ஆதரவற்ற 10 உடல்களை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இந்த செயல் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மட்டுமின்றி அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பிணவறையில் அடையாளம் தெரியாத சடலங்கள், பெயர் தெரிந்த சடலங்கள் வைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு வைக்கப்படும் ஒருசில உடல்களை யாரும் உரிமை கோருவதில்லை. இதனால் அவை ஆதரவற்ற, உரிமை கோரப்படாத உடல்களாக கணக்கிடப்படும். இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன், தலைமை காவலர் ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து ஆதவற்ற இருந்த உடல்களை தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்த 10 உடல்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி எடுத்து சென்றனர். அங்கு பொக்லின் எந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு அதில் 10 உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. அவர்களுக்கு ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உதவி செய்தனர். இறந்தவர்களுக்கு செய்யப்படும் ஈமச்சடங்கு, சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு பின்னர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. காவல்துறையினரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story